​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

Published : Jan 11, 2019 5:23 PM

பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

Jan 11, 2019 5:23 PM

பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஓரப்பம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை மற்றும் குந்தாரப்பள்ளி ஆகிய பகுதிகளில் ஆட்டு சந்தை நடைபெற்றது.


இதில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை, விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்தனர்.
குறிப்பாக ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருத்து வந்திருந்த வியாபாரிகள், போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.