​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆப்கனில் இந்தியா நூலகம் கட்டுவதால் என்ன பயன் என்று டிரம்ப் கூறிய விவகாரம், டிரம்பின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது-ஹமீத் கர்சாய்

Published : Jan 11, 2019 5:14 PM

ஆப்கனில் இந்தியா நூலகம் கட்டுவதால் என்ன பயன் என்று டிரம்ப் கூறிய விவகாரம், டிரம்பின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது-ஹமீத் கர்சாய்

Jan 11, 2019 5:14 PM

ஆப்கானிஸ்தானில் இந்தியா நூலகங்களை கட்டுவதால் என்ன பயன் என்று அதிபர் டிரம்ப் கூறியது, தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நூலகங்கள் கட்டுவதாக இந்திய பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும், ஆனால் அங்கு சென்று படிக்கப் போவது யார் என்பதுதான் தெரியவில்லை என்றும் டிரம்ப் அண்மையில் கிண்டலடித்திருந்தார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கு அமெரிக்கா செலவிடும் தொகையில், அற்பத் தொகையைக் கூட இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் செலவிடுவதில்லை என விமர்சிக்கும் நோக்கில் டிரம்ப் இவ்வாறு கிண்டலடித்திருந்தார்.

ஆப்கானிஸ்தானில் இந்தியா ஆக்கபூர்வ பணிகளை செய்து வருகிறது என்றும், அத்தகைய பணிகளை தொடரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் பதிலடி கொடுத்திருந்தன. இந்நிலையில், அதிபர் டிரம்ப் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும், ஆப்கானிஸ்தானில் அமைதிப் பணிகள் மற்றும் மறுகட்டமைப்பில் இந்தியா விரிவான பங்காற்ற வேண்டும் என்ற அர்த்தத்திலேயே டிரம்ப் கூறியுள்ளதாகவும் அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்துள்ளார்.