​​ பூசணிக்காய் விலை உயர்வு, விவசாயிகள் மகிழ்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பூசணிக்காய் விலை உயர்வு, விவசாயிகள் மகிழ்ச்சி

Published : Jan 11, 2019 5:10 PM

பூசணிக்காய் விலை உயர்வு, விவசாயிகள் மகிழ்ச்சி

Jan 11, 2019 5:10 PM

பாலக்கோடு பகுதியில், பூசணிக்காய், கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள், பூசணிக்காயை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், புலிகரை, சோமனஹள்ளி போன்ற பகுதியில், பூசணிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கடந்த மாதம் கிலோ 3ரூபாய்க்கு விற்பனை ஆன பூசணி, தற்போது விலை உயர்ந்து, கிலோ 10ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.