​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையோரம் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது லாரி மோது விபத்து

Published : Jan 11, 2019 5:00 PM

சாலையோரம் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது லாரி மோது விபத்து

Jan 11, 2019 5:00 PM

தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியர்கள் மீது மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

உருளைக் கிழக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி சென்ற லாரி, தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது அதிவேகமாக வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் தூய்மைப்பணியில் ஈடுபட்ட எல்.என்.டி ஊழியர்கள் மீது மோதி 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்ராஜ், தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஊழியர் தங்கவேலு ஆகியோர் உயிரிழந்தனர். இரண்டு ஊழியர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.