​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், தேவைப்பட்டால் நெருக்கடி நிலையை அறிவிக்கப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை

Published : Jan 11, 2019 4:54 PM

மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், தேவைப்பட்டால் நெருக்கடி நிலையை அறிவிக்கப் போவதாக டிரம்ப் எச்சரிக்கை

Jan 11, 2019 4:54 PM

மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக அரசுக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் உடன்பாடு ஏற்படாத நிலையில், தேவைப்பட்டால் நெருக்கடி நிலையை அறிவிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மெக்சிக்கோ எல்லையில் பாதுகாப்புச் சுவர் எழுப்ப 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப், ஜனநாயகக் கட்சியினருடன் பேச்சு நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஜனநாயகக் கட்சியினர் உடன்படாமலே போகும் நிலையில் நெருக்கடி நிலையைக் கூட அறிவிப்பேன் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இதன் மூலம் ராணுவ நிதியைக் கொண்டு மெக்சிக்கோ எல்லையில் பாதுகாப்புச் சுவர் எழுப்ப முடியும் என்பதால், இந்த வழிமுறையை நாட அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டாலும் சிவில் உரிமைகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. இருப்பினும் அரசியல்ரீதியான மோதல்களில் ராணுவத்தை இழுப்பது தவறான முன்னுதாரணமாகி விடும் என அங்குள்ள அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.