​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பை எதிர்த்து போரடுவதாக கூறி அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்

Published : Jan 11, 2019 4:51 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பை எதிர்த்து போரடுவதாக கூறி அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்

Jan 11, 2019 4:51 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பை எதிர்த்து போரடுவதாக கூறி அரசு அதிகாரிகளைத் தாக்கிய ராஷ்டிரிய பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர் நடு ரோட்டில் வைத்து தாக்கப்பட்டார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இருந்து நீக்கப்பட்ட பிரவீன் தொகாடியா, ராஷ்டிரிய பஜ்ரங் தளம் என்ற அமைபபை உருவாக்கினார்.

அதில் உறுப்பினராக உள்ள கோவிந்த் பராஷர், ராகுல் மற்றும் மணீஷ் ஆகியோர், ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் உள்ளாட்சித்துறை அலுவலகம் முன் சென்று போராட்டம் நடத்தினர்.

அப்போது, அங்கிருந்த அரசு அதிகாரிகளை தாக்கியதாகக் கூறி அவர்களை விரட்டி வந்த அரசு ஊழியர்கள் நடு ரோட்டில் வைத்து ராஷ்டிரிய பஜ்ரங் தள உறுப்பினர்களை சரமாரியாகத் தாக்கினர்.