​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் தாமரை மலரப்போவதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published : Jan 11, 2019 4:45 PM

தமிழகத்தில் தாமரை மலரப்போவதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Jan 11, 2019 4:45 PM

தமிழகத்தில் தாமரை மலரப்போவதில்லை என்று கூறியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, ஏதாவது ஒரு தொகுதியில் பாஜக டெபாசிட் அல்லது நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்கினால் நல்லது என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வணிக வைசிய நடுநிலைப்பள்ளி பொங்கல் விழாவிலும் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, தமிழிசை விமர்சனம் குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் தாமரை மலரப்போவதில்லை என்று பதிலளித்தார்.

வைகோவின் திமுக ஆதரவு நிலைப்பாட்டையும் கடம்பூர் ராஜு சாடினார். கூட்டணிக்காக ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது, அழைப்பு விடுத்தவர்களைத்தான் கேட்க வேண்டும் என அமைச்சர் பதிலளித்தார்.