​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயிலில் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் கைது

Published : Jan 11, 2019 4:36 PM

ரயிலில் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் கைது

Jan 11, 2019 4:36 PM

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட எட்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது.

இதில் பயணித்த மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபட்டப்படி வந்துள்ளனர். இந்த தகவலறிந்த போலீசார் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் அஜீத், மணிமாறன், கோகுல், எழிலரசு உள்ளிட்ட எட்டு மாணவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்கள் மீது பொதுமக்களை அச்சுறுத்துதல், இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார் ஒரு கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர்.