​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செய்தியாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம்ரகீம் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

Published : Jan 11, 2019 4:36 PM

செய்தியாளர் கொலை வழக்கில் குர்மீத் ராம்ரகீம் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

Jan 11, 2019 4:36 PM

செய்தியாளரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம்ரகீம் உள்ளிட்ட 4பேர் குற்றவாளிகள் எனப் பஞ்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அரியானாவின் சிர்சா நகரில் ஆசிரமம் நடத்தி வந்த தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம்ரகீம் பற்றிய உண்மைகளைச் செய்தியாளர் ராம்சந்தர் சத்ரபதி முற்றிலும் உண்மை எனப் பொருள்படும் பூரா சச் என்கிற தனது இதழில் வெளியிட்டார்.

இதற்குப் பழிவாங்கும் வகையில் 2002அக்டோபர் 24ஆம் நாள் குர்மீத் ராம்ரகீமின் ஆட்கள் ராம்சந்தர் சத்ரபதியை சிர்சாவில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்தக் கொலை வழக்கில் குர்மீத் ராம்ரகீம், குல்தீப், நிர்மல், கிரிசன்லால் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், குர்மீத் ராம்ரகீம் உட்பட 4பேரும் குற்றவாளிகள் எனத் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை ஜனவரி 17ஆம் நாள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்திலும் பஞ்ச்குலா, சிர்சா, ரோத்தக் ஆகிய நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனது ஆசிரமத்தில் இருந்த இளம்பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஏற்கெனவே 20ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற குர்மீத் ராம்ரகீம் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.