​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணா பல்கலைக்கழகத்தில் 6வது ஆண்டு ரோபோ கண்காட்சி

Published : Jan 11, 2019 4:24 PM

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6வது ஆண்டு ரோபோ கண்காட்சி

Jan 11, 2019 4:24 PM

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ரோபோ கண்காட்சி பார்வையாளர்களைக் கவர்நத்து. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6-வது ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 24 பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ - மாணவியர் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

ஃபுட்பால் விளையாடும் ரோபோ, மலைகள் உள்ளிட்ட கரடு முரடான இடங்கள் தண்ணீர், மண் மற்றும் பலகைக் தளங்களில் செயல்படும் ரோபோக்கள், ஜல்லிக்கட்டு ரோபோ உள்ளிட்டவை பார்வையாளர்களைக் கவர்ந்தன.

கஜா புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போது மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால், மக்கள் அந்த இடத்தை அணுகாமல் அலாரம் எழுப்பி எச்சரிக்கும் கருவியும் இடம் பெற்றிருந்தது

மனிதக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, உரமாக பயன்படுத்துவது உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்தும் பள்ளி மாணவர்கள் விளக்கினர்.

மாடித் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் தானியங்கி  தொழில்நுட்பம் வெள்ளக் காலங்களில் அணை நீர்மட்டத்தை கண்காணித்து எச்சரிக்கும் கருவி ஸ்மார்ட் சிட்டிகளுக்கு பயன்படும் வகையான தொழிநுட்பங்கள் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.