​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டிருப்பது, மோடியின் மனதை அச்சம் அலைக்கழிப்பதையே காட்டுகிறது-ராகுல்காந்தி

Published : Jan 11, 2019 3:33 PM

சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டிருப்பது, மோடியின் மனதை அச்சம் அலைக்கழிப்பதையே காட்டுகிறது-ராகுல்காந்தி

Jan 11, 2019 3:33 PM

சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டிருப்பது, பிரதமர் மோடியின் மனதை அச்சம் அலைக்கழிப்பதையே காட்டுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடியின் மனதை அச்சம் அலைக்கழிப்பதால்  அவரால் தூங்க முடியாது என்று கூறியுள்ளார். இந்திய விமானப்படையிடம் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி அனில் அம்பானிக்கு அவர் கொடுத்திருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இருமுறை அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கியிருப்பது, தனது பொய்களின் கைதியாக பிரதமர் இருப்பதையே காட்டுவதாகவும், வாய்மையே வெல்லும் என்றும் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.