​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெற்ற தாயை கள்ளக்காதலனுடன் சேர்ந்து எரித்துக் கொன்ற பெண்

Published : Jan 11, 2019 3:33 PM

பெற்ற தாயை கள்ளக்காதலனுடன் சேர்ந்து எரித்துக் கொன்ற பெண்

Jan 11, 2019 3:33 PM

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பெற்ற தாயை கள்ளக்காதலனுடன் சேர்ந்து எரித்துக் கொன்ற பெண்ணையும் அவளது கள்ளக்காதலனையும் விசாரணைக்குப் பின் போலீசார் சிறையில் அடைத்தனர்.

சானிட்டோரியம் பகுதியைச் சேர்ந்த பூபதி என்ற பெண் கடந்த 7ஆம் தேதி உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

போலீசாரின் விசாரணையில் பூபதியின் இளைய மகள் நந்தினி, தனது கள்ளக்காதலனான திருநீர்மலையை சேர்ந்த முருகனுடன் சேர்ந்து அவரை தீயிட்டு கொளுத்தியது தெரியவந்தது.

தங்களுக்கிடையேயான தவறான உறவுக்கு தாய் பூபதி இடையூறாக இருந்ததால் அவரை நந்தினி கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து நந்தினியையும் முருகனையும் கைது செய்த போலீசார், தீவிர விசாரணைக்குப் பின் அவர்களை சிறையில் அடைத்தனர்.