​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு மர்ம நபர் தீ வைப்பு, போலீசார் விசாரணை

Published : Jan 11, 2019 3:16 PM

மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு மர்ம நபர் தீ வைப்பு, போலீசார் விசாரணை

Jan 11, 2019 3:16 PM

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை அடுத்துள்ள வடகரை கிராமத்தில் முசாகுதின் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். அதிகாலையில் மூடப்பட்டிருந்த டீ கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர் தீ வைத்து விட்டு சென்றுள்ளார்.

மளமளவென பரவிய தீயால் அருகில் இருந்த மூன்று கடைகள் எரிந்து நாசமாகி உள்ளன. டீ கடைக்கு மர்மநபர் தீ வைத்த காட்சி எதிரே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதனை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் கருணாகரன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.