​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நினைத்ததை விட அதிக வேகத்தில் கடல் நீர் வெப்பம் அதிகரிக்கிறது : அறிவியலாளர்கள்

Published : Jan 11, 2019 2:36 PM

நினைத்ததை விட அதிக வேகத்தில் கடல் நீர் வெப்பம் அதிகரிக்கிறது : அறிவியலாளர்கள்

Jan 11, 2019 2:36 PM

நினைத்ததை விட அதிக வேகத்தில்கடல் நீர்  வெப்பம் அதிகரித்து வருவதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள கடற்பரப்பில் வெவ்வேறு இடங்களில், 3 ஆயிரத்து 900 மிதவைகள் உதவியோடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில் 1971-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை, கடலில் 2 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் பூஜ்ஜியம் புள்ளி ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மீன்கள் குளிரான நீர் தேடி இடம் பெயருகின்றன.

வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கடல் நீரில் ஆக்சிஜன் குறைவதாகவும், இது பவளப்பாறைகளையும், கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வையும் கடுமையாக பாதிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், வெப்பமான கடற்பரப்பில் இருந்து வெளியேறும் ஈரத்தன்மை அதிக சக்திவாய்ந்த புயல்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் கணித்து எச்சரித்துள்ளனர். சுற்றுச்சுசூழலுக்கு உகந்த வாகன எரிபொருளுக்கு மாற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.