​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார், விளம்பர நிறுவன உரிமையாளர் கைது

Published : Jan 11, 2019 1:47 PM

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார், விளம்பர நிறுவன உரிமையாளர் கைது

Jan 11, 2019 1:47 PM

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசைத்தம்பி மீடியா நெட்வொர்க் என்ற தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் ஆசைத்தம்பி மீடியா நெட்வொர்க் என்ற விளம்பர நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2-ம்தேதி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில், தமது அலுவலக உரிமையாளர் சிரஞ்சீவி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் 2 மாதம் சம்பளம் கொடுக்க மறுத்து விட்டு ஏமாற்றியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் நீலாங்கரையைச் சேர்ந்த 41 வயதான சிரஞ்சீவியை கைது செய்தனர். இவர் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.