​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Published : Jan 11, 2019 1:45 PM

லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Jan 11, 2019 1:45 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமறைவாக உள்ள நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பதி என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் இருதினங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் - பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளார்.

அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய ஆய்வில் லஞ்சமாக பெறப்பட்ட 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்ய முயன்ற போது காரில் தப்பி சென்ற காவல் ஆய்வாளர் பதி இன்னும் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் தேடி வரும் நிலையில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தப்பி ஓடிய ஆய்வாளர் பதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.