​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2023க்குள் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Published : Jan 11, 2019 1:41 PM

2023க்குள் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை-அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Jan 11, 2019 1:41 PM

2023 ம் ஆண்டுக்குள் ஏழைகளே இல்லாத நிலைமையை உருவாக்க தமிழக அரசு பாடுபட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பூரில்  41 புதிய பேருந்துகளின் சேவையை அவர் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான கால்கோள் விழாவில் அவர் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழகம் முழுவதும் எழுபத்து ஏழாயிரத்துக்கு மேற்பட்ட பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நாட்டுக்கோழிகள் வழங்கப்படவிருப்பதகவும் தெரிவித்தார்.