​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வல்லூர் அனல் மின் நிலையத்தை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

Published : Jan 11, 2019 1:11 PM

வல்லூர் அனல் மின் நிலையத்தை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

Jan 11, 2019 1:11 PM

மத்திய அரசு கொடுத்த அனுமதி காலத்தை தாண்டி செயல்பட்டு வந்ததால், சென்னை வல்லூர் அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் செயல் பட்டு வந்த தேசிய அனல் மின் நிலைய நிர்வாகம், எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணூர் சதுப்பு நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்ட அனல் மின் நிலையத்திற்கு தடை விதித்னர்.

மேலும், இந்த அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு அளித்த அனுமதி 2018 மார்ச்சுடன் முடிவடைந்ததால்,அனுமதியை புதுப்பிப்பதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து ஆலை இயங்க தடை விதித்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

இதனை தொடர்ந்து வல்லூர் அனல் மின் நிலையம் மூடப்பட்டது. அதே சமயம் உயர்நீதிமன்ற இடைக்கால தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அனல் மின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.