​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்கள், மத்தியில் ஆட்சிக்கு வரவே அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் - முதலமைச்சர்

Published : Jan 11, 2019 12:30 PM



தமிழக மக்களுக்கு நன்மை செய்பவர்கள், மத்தியில் ஆட்சிக்கு வரவே அ.தி.மு.க ஆதரவு அளிக்கும் - முதலமைச்சர்

Jan 11, 2019 12:30 PM

வாக்கு அரசியலுக்காகவே பொங்கலுக்கு ரூபாய் 1000 வழங்கப்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள்...

பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரை நிகழ்ச்சிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் திருநாளை அனைவரும் கொண்டாடவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அ.தி.மு.க அரசுக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும், அவர் நடத்தும் ஊராட்சி சபை கூட்டங்கள் பற்றியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

 

நானும், அமைச்சர்கள் பலரும் கிராமத்திலேயே வளர்ந்தவர்கள்-எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியே மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் தங்களுடைய எண்ணம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.