​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரெக்சிட் உடன்பாட்டால் ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிப்பு நிறுத்தப்படும் அபாயம்

Published : Jan 11, 2019 12:25 PM

பிரெக்சிட் உடன்பாட்டால் ரோல்ஸ் ராய்ஸ் கார் தயாரிப்பு நிறுத்தப்படும் அபாயம்

Jan 11, 2019 12:25 PM

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் கார் தயாரிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என  கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் என்னும் உடன்பாட்டைச் செய்துள்ளது. இதன்படி மார்ச் 29ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிவிடும்.

அதன்பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் புதிய வணிக உடன்பாட்டைச் செய்துகொள்ளும். இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஆடம்பரக் கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், பிரெக்சிட் உடன்பாட்டால் கார் தயாரிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் 32ஆயிரம் பாகங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் இவற்றில் 8விழுக்காடு பாகங்களே பிரிட்டனில் தயாரிக்கப்படுவதாகவும், மீதி 92விழுக்காடு பாகங்கள் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறுநூறு நிறுவனங்களால் தயாரித்து வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரெக்சிட் உடன்படிக்கையால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஒரே ஒரு பாகம் வராவிட்டாலும் கார் தயாரிப்பு நின்றுபோகும் நிலை உள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.