​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

Published : Jan 11, 2019 11:59 AM

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

Jan 11, 2019 11:59 AM

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்ட வழக்கில் கைதான 16 பேர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம், காலதாமதமாக பதிவு செய்யப்பட்டதாக கூறி, அதனை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற சம்பவத்தில், குடியிருப்பில் பணியாற்றிய ஊழியர்கள் உள்ளிட்ட 17 பேரை கடந்த ஜூலை 18ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 17 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.

இதனை ரத்து செய்யக்கோரி, 16 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை, உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், ஹேமலதா முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்து 30 நாட்களுக்குள் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்யவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

காலதாமாக இந்த குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே 16 பேரின் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.