​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைக்கப் பேச்சு

Published : Jan 11, 2019 11:12 AM



உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைக்கப் பேச்சு

Jan 11, 2019 11:12 AM

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மாயாவதியும் அகிலேசும் நாளை கூட்டாக அறிவிப்பு வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

80நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 2014நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதிக் கட்சியும் தனித்தனியாகப் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் பாஜக 71தொகுதிகளில் வெற்றிபெற்றது. கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சில சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் சமாஜ்வாதிக் கட்சி வெற்றிபெற்றது.

இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இரு கட்சித் தலைவர்களும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

ராகுலும் சோனியாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகளைத் தவிர மற்ற 78தொகுதிகளையும் இரு கட்சிகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள உடன்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டணி குறித்தும் தொகுதிப்பங்கீடு குறித்தும் மாயாவதியும், அகிலேசும் நாளை கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.