​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செய்தியாளரைச் சுட்டுக்கொன்ற வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு - பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

Published : Jan 11, 2019 10:46 AM



செய்தியாளரைச் சுட்டுக்கொன்ற வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு - பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

Jan 11, 2019 10:46 AM

செய்தியாளர் கொலை தொடர்பான குர்மீத் ராம்ரகீமுக்கு எதிரான வழக்கில் பஞ்ச்குலா நீதிமன்றம் இன்று தீர்ப்பளிப்பதை முன்னிட்டுப் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேரா சச்சா சவுதா என்னும் அமைப்பின் தலைவரான குர்மீத் ராம்ரகீம் தனது ஆசிரமத்தில் இருந்த இளம்பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் உள்ளார்.

ராம்ரகீம் பற்றிய உண்மைகளை இதழில் வெளியிட்ட செய்தியாளர் ராம்சந்தர் சத்ரபதி 2002ஆம் ஆண்டு குர்மீத் ராம்ரகீம் ஆட்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகார் உள்ளது.

இது தொடர்பாகக் குர்மீத் ராம்ரகீம், குல்தீப், நிர்மல், கிரிசன்லால் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நகரின் முதன்மையான சாலைகளில் ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

தேரா சச்சா சவுதா தலைமையகம் அமைந்துள்ள சிர்சாவில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குர்மீத் ராம்ரகீமுக்கு 20ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பல இடங்களில் அவரின் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறிப்பிடத் தக்கது.