​​ இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை ஆரம்பம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை ஆரம்பம்

Published : Jan 11, 2019 7:30 AM

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை ஆரம்பம்

Jan 11, 2019 7:30 AM

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடர் போட்டியில் இந்திய அணி 2க்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள ஒரு நாள் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். டெஸ்ட் தொடரை வென்றது போன்று ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வெல்ல இந்திய வீரர்கள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.

எனவே இந்த போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது. இரு அணிகள் இடையேயும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.