​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற தேர்தல் முன் தயாரிப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

Published : Jan 10, 2019 9:12 PM



நாடாளுமன்ற தேர்தல் முன் தயாரிப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

Jan 10, 2019 9:12 PM

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

நடப்பு மைய அரசின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைவதால், வருகிற ஏப்ரல், மே மாதங்களில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, முன் தயாரிப்பு பணிகளில், தலைமை தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்த வகையில், தலைநகர் டெல்லியில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான இரண்டு நாள் கருத்தரங்கிற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் இந்த கருத்தரங்கில், நாடாளுமன்ற தேர்தல் முன் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.