​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4 அரசு மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Published : Jan 10, 2019 8:47 PM

4 அரசு மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Jan 10, 2019 8:47 PM

நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மதுரை, திருச்சி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவற்றோடு, கண்காணிப்பாளர், இருப்பிட மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.