​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இட ஒதுக்கீட்டில் வழங்க வேலை எங்கே கொட்டிக் கிடக்கிறது? - சிவசேனா கேள்வி

Published : Jan 10, 2019 6:46 PM

இட ஒதுக்கீட்டில் வழங்க வேலை எங்கே கொட்டிக் கிடக்கிறது? - சிவசேனா கேள்வி

Jan 10, 2019 6:46 PM

பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நிலையில், நாட்டில் வேலைவாய்ப்பு எங்கே கொட்டிக் கிடக்கிறது? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த கட்சியின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது வரவேற்புக்கு உரியது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நாட்டில் வேலைவாய்ப்பு எங்கே கொட்டிக் கிடக்கிறது? என கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு விளையாடுவதாக சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் எந்த பலனையும் தராது என சிவசேனா கூறியுள்ளது.