​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அ.ம.மு.க. சார்பில் பாலக்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published : Jan 10, 2019 6:24 PM

அ.ம.மு.க. சார்பில் பாலக்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

Jan 10, 2019 6:24 PM

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிகையான எண்ணேக்கொள்புதூர் திட்டம், அலியாளம் திட்டம், ஜெர்த்தலாவ் கால்வாய் திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கோரி அ.ம.மு.க. சார்பில் பாலக்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்பெண்ணை ஆற்று உபரி நீரை தடுப்பணைகள் மூலம் விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையிலான இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், போராட்ட அறிவிப்பை அடுத்தே திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.