​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியைச் சந்திக்க புறப்பட்ட பாலிவுட் பட்டாளம்

Published : Jan 10, 2019 5:57 PM

பிரதமர் மோடியைச் சந்திக்க புறப்பட்ட பாலிவுட் பட்டாளம்

Jan 10, 2019 5:57 PM

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக பாலிவுட் நட்சத்திரப் பட்டாளம் டெல்லி சென்றுள்ளது.

பாலிவுட்டின் இளம் நடிகர், நடிகைகளை பிரதமர் மோடி சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கு, திரைப்படங்கள் கலாச்சாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமரின் அழைப்பை ஏற்று பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் டெல்லி புறப்பட்டனர். அலியா பட், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் ,கரண் ஜோஹர், உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பலரும் குழுவாக பிரதமரைச் சந்திக்க சென்றுள்ளனர்.