​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள்

Published : Jan 10, 2019 3:05 PM

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள்

Jan 10, 2019 3:05 PM

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. தொடங்கப்படவுள்ள அங்கன்வாடி மையங்களில் கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுவது குறித்து உள்ளூர் மக்களை அணுகி குழந்தைகளை சேர்க்க வலியுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை குறித்த விளம்பரத்தட்டிகளை பள்ளி வளாகங்களில் வைக்க வேண்டும், குழந்தைகளின் விவரங்களை EMIS இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.