​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலின பாகுபாட்டுடன் பேசி இருப்பதாக ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Published : Jan 10, 2019 1:20 PM

பாலின பாகுபாட்டுடன் பேசி இருப்பதாக ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Jan 10, 2019 1:20 PM

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பெண் எனக் குறிப்பிட்டு பாலின பாகுபாடு காட்டியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பேசிய ராகுல் காந்தி, 56 அங்குலம் மார்புடைய காவலாளி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பிரதமர் மோடி, ரபேல் போர் விமான விவகாரத்தில் ஒரு பெண்ணின் பின்னால் ஒளிந்து கொண்டு தன்னைக் காத்துக் கொள்வதாக நிர்மலா சீத்தாராமனைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

ஆண் போல் நடந்து கொள்ளுமாறும் பிரதமர் மோடியை அவர் சாடினார். இந்த நிலையில், பெண், ஆண் என பாலினப் பாகுபாட்டுடன் ராகுல் காந்தி பேசியுள்ளதாகக் கூறி அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.