​​ மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Published : Jan 10, 2019 9:59 AM

மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Jan 10, 2019 9:59 AM

திமுகவின் செல்வாக்கு உயர்ந்து விடும் என்ற எண்ணத்தில்தான், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தயங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சீகம்பட்டியில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது குடவோலை முறை பற்றி அவர் பேசினார்.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். அதிமுக அரசு, உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடுவதாக புகார் கூறிய அவர், திமுக வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் தான் இவ்வாறு செய்வதாக குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து மக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, பெண்கள் தான் தெளிவாகவும், தைரியமாகவும் பேசுவார்கள் என்று கூறி பெண்களை பேச அழைத்தார்.

கல்லூரி மாணவிகள் தொடங்கி மூதாட்டி வரை அனைவரும் தங்களது குறைகளைக் கூற, அதை மு.க.ஸ்டாலின் குறித்து வைத்துக் கொண்டார்.

இதை அடுத்து நவலூர் குட்டப்பட்டுவில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறை சென்ற போது அழுது கொண்டே பதவியேற்றவர்கள், அவர் உயிரிழந்த பின்னர் பதவிக்கு போட்டி போடுவதாக விமர்சித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் ஒரு நாடகம் என்று கூறிய ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சரே இதில் சந்தேகம் எழுப்பி இருப்பதாக குறிப்பிட்டார்.