​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளியானது ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம்..! திரையரங்குகளில் ரசிகர்கள் முன்னிலையில் திருமணம்

Published : Jan 10, 2019 7:01 AM

வெளியானது ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம்..! திரையரங்குகளில் ரசிகர்கள் முன்னிலையில் திருமணம்

Jan 10, 2019 7:01 AM

ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசமும் இன்று வெளியாகியுள்ளன. படத்தின் சிறப்புக் காட்சிகளைக் காண நள்ளிரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் திரண்டனர்.

பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் வெளியீடாக இன்று வெளியாகின.
நள்ளிரவு 12 மணிக்கு முதல் காட்சி என்பதால் ரசிகர்கள் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களும் திரையரங்குகளில் திரண்டிருந்தனர். பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி தோன்றுகிறார். சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சின்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் சிவாவுடன் இணைந்து அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். அடிதடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியான படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாக பரவியது. அஜித்துக்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

முதல் காட்சியை நள்ளிரவில் வெளியிட அனுமதியில்லை என்று காவல்துறையினர் தடுத்ததால் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியிடப்பட்டன. அப்போது, சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேட்ட படத்தின் பேனரை சிலர் கிழித்து சேதப்படுத்தினர்.

சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கில் பேட்ட திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு ரஜினி ரசிகருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. காலை எட்டு முப்பது மணிக்கு பேட்ட திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் திரையரங்கில் காதல் ஜோடி அன்பரசு - காமாட்சிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இருவரும் சிறு வயது முதலே தீவிர ரஜினி ரசிகர்கள் என்பதால் பேட்ட திரைப்படத்தை முன்னிட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். மணமக்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பீரோ, கட்டில் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

image

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பேட்ட திரைப்படத்தை முன்னிட்டு 100 அடி உயரத்திற்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேனருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தஞ்சையில் பேட்ட திரைப்படம் வெளியானதை முன்னிட்டு ரஜினி ரசிகர் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. சாந்தி திரையரங்கில் காலை எட்டு முப்பது மணிக்கு பேட்ட திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. அப்போது திரையரங்கம் வெளியே மேடை அமைக்கப்பட்டு ஜோதிராமன் என்ற ரஜினி ரசிகருக்கும், உஷா ராணி என்ற பெண்ணுக்கும் தஞ்சை தலைமை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர் வரிசை பொருட்களுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

 இதற்கிடையே மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் வெளியான விஸ்வாசம் படத்தை காண அஜித் ரசிகர்கள் குவிந்தனர். திரையரங்கு வெளியே விஸ்வாசம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மேள தாளங்கள் முழங்க பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை காண சென்றனர்.

பேட்ட திரைப்படம் வெற்றி பெற வேண்டி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரஜினி ரசிகர் ஒருவர் 16 அடி அலகு குத்திக் கொண்டு திரையரங்கிற்கு சென்றார். திருவாளப்புத்தூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார்.

இவர் மயிலாடுதுறையில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோவிலில், பேட்ட திரைப்படம் வெற்றி பெற வேண்டி, 16 அடி அளவுடைய அலகை வாயில் குத்திக் கொண்டு விஜயா திரையரங்கிற்கு நடந்துச் சென்றார். அவரை மேலதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் வரவேற்றனர். பின்னர் நடராஜன் அலகை கழற்றிவிட்டு பேட்ட திரைப்படத்தை கண்டார்.

பேட்ட திரைப்படம் வெற்றி பெற வேண்டி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ரஜினி ரசிகர் ஒருவர் 16 அடி அலகு குத்திக் கொண்டு திரையரங்கிற்கு சென்றார். திருவாளப்புத்தூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார். இவர் மயிலாடுதுறையில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோவிலில், பேட்ட திரைப்படம் வெற்றி பெற வேண்டி, 16 அடி அளவுடைய அலகை வாயில் குத்திக் கொண்டு விஜயா திரையரங்கிற்கு நடந்துச் சென்றார். அவரை மேலதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் வரவேற்றனர். பின்னர் நடராஜன் அலகை கழற்றிவிட்டு பேட்ட திரைப்படத்தை கண்டார்.