​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களைவையிலும் நிறைவேற்றம்...அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு

Published : Jan 10, 2019 6:37 AM

பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களைவையிலும் நிறைவேற்றம்...அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு

Jan 10, 2019 6:37 AM

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

பொருளாதாரத்தில் நலிவடைந்து, பின் தங்கியுள்ள பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அ

திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

இதையடுத்து, மாநிலங்களவையில் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவை, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். விவாதத்தின்போது, அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அமளி தொடர்ந்ததால், பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் விவாதம் தொடங்கி நடைபெற்றது. மசோதாவுக்கு அ.தி.மு.க. தி.மு.க. ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனை அடுத்து 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. 7 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.