​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் நிலவி வரும் வறட்சி

Published : Jan 09, 2019 7:20 PM

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் நிலவி வரும் வறட்சி

Jan 09, 2019 7:20 PM

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில், நிலவி வரும் வறட்சியால் வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்துள்ளது.

கொள்ளுக்குடிப்பட்டியில் 39 ஹெக்டர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இனபெருக்கத்திற்காக வெளிநாடுகளில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகை தருவது வழக்கம்.

தற்போது சரணாலயத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக இரை கிடைக்காது என்பதால் வெளிநாட்டு பறவைகளின் வரத்து மிக குறைவாக உள்ளது.

வெள்ளை அரிவாள்மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், கொக்கு, நாரை உள்ளிட்ட இன வகை பறவைகள் மட்டுமே காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்பதி அடைந்து வருகின்றனர்.