​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி விகிதம் 7.3சதவீதமாக உயரும் - உலக வங்கி

Published : Jan 09, 2019 5:08 PM

நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சி விகிதம் 7.3சதவீதமாக உயரும் - உலக வங்கி

Jan 09, 2019 5:08 PM

இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வரும் நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளுக்கு இந்தியாவின் ஜிடிபி 7 புள்ளி 5 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் சரிவடைந்ததாகவும், தற்போது இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.

தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தை எட்டி உள்ளதாகவும், ஜிஎஸ்டி தற்போது இந்திய முதலீட்டை பலப்படுத்தி உள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.