​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் ஏல அடிப்படையில் விநியோகம்

Published : Jan 09, 2019 3:11 PM

ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் ஏல அடிப்படையில் விநியோகம்

Jan 09, 2019 3:11 PM

ஏர் இந்தியா விமானத்தில் ஏலம் மூலம் காலியாக உள்ள பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டை சிக்கன வகுப்புப் பயணிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமானத்தில் பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுக்களை பெரும்பாலானோர் தேர்வு செய்யாமலே இருப்பதால், அவற்றை காலியாகவே இயக்குவதில் நஷ்டம் ஏற்படுவதாக ஏர் இந்தியா தலைவரும் மேலாண் இயக்குநருமான பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.

எனவே, சில குறிப்பிட்ட மெட்ரோ நகரங்களில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் சிக்கன வகுப்பில் பயணிப்பவர்கள் அனைவரும் செக் இன்-க்கு வந்த பின், பாதுகாப்பு பரிசோதனைக்கு செல்லும் முன்பாக எத்தனை பிசினஸ் கிளாஸ் இடங்கள் காலியாக உள்ளன என கணிக்கப்படும்.

அதன் பின், சிக்கன வகுப்பில் செலுத்திய கட்டணம் போக ஒரு குறிப்பிட்ட தொகை ஏலத்தின் மூலம் நிர்ணயித்து பிசினஸ் லைட் எனும் பெயரில் டிக்கெட் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்துக்கான அதிகபட்ச தொகை முன்பே நிர்ணயிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.