​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2019 -2020 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பாடச்சுமை குறைகிறது

Published : Jan 09, 2019 2:43 PM

2019 -2020 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பாடச்சுமை குறைகிறது

Jan 09, 2019 2:43 PM

2019-2020ம் கல்வியாண்டியில் இருந்து சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களின் எடை 15 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி செல்லும் மாணவ,மாணவியர் பாடப்புத்தகங்களின் சுமை இல்லாமல் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்று வரவேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள பாடங்களின் அளவை 50 சதவிகிதம் வரை குறைக்க அமைச்சகம் திட்டமிட்ட நிலையில், அதன் முதற்கட்டமாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வரும் கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. மாணவர்களின் புத்தகச்சுமையை 10 முதல் 15 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது. 

1 முதல் 12-ம் வகுப்பு வரை வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்களில் தேவையில்லாத பாடப்பகுதிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில் அதிகளவிலான பகுதிகள் நீக்கப்படவுள்ளது. அதே நேரத்தில் கணிதம், அறிவியல் பாடங்களிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களிலும் எந்த பகுதியும் நீக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.