​​ கடல்சீற்றம் காரணமாக நடுக்கடலில் மூழ்கிய பைபர் படகு, ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் மீட்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடல்சீற்றம் காரணமாக நடுக்கடலில் மூழ்கிய பைபர் படகு, ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் மீட்பு

Published : Jan 09, 2019 12:35 PM

கடல்சீற்றம் காரணமாக நடுக்கடலில் மூழ்கிய பைபர் படகு, ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் மீட்பு

Jan 09, 2019 12:35 PM

கடலூரில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் மூழ்கிய பைபர் படகை நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள் உதவியுடன், கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

கடலூர் அருகே புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்ற மீனவர், தமக்கு சொந்தமான பைபர் படகில், அதேபகுதியைச் சேர்ந்த மேலும் 4 பேருடன் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றார்.

கடல் சீற்றம் காரணமாக, படகு கவிழ்ந்து மூழ்கிய நிலையில், அதில் இருந்த 5 மீனவர்களும், மீட்கப்பட்டு, மற்றொரு படகில் கரையை அடைந்தனர்.

இந்நிலையில், மீனவர் ஏழுமலை, தமது வாழ்வாதாரமாக விளங்கிய படகை மீட்டுத் தருமாறு, கடலூரில் உள்ள கடலோரக் காவல்படையில் மனு அளித்தார்.

image

இதையடுத்து, ஸ்கூபா டைவிங் வீரர்கள் 4 பேர் மற்றும் 10 மீனவர்களுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற கடலோரக் காவல்படையினர், ஜிபிஎஸ் சிக்னல் மூலம் படகு மூழ்கியிருந்த இடத்தை கண்டறிந்தனர். இதையடுத்து, கடலில் குதித்த நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள், படகில் கயிறு கட்டி, அதை மேலே கொண்டுவந்தனர்.

கடலின் மேற்பரப்புக்கு கொண்டுவரப்பட்ட படகு, மற்றொரு படகின் உதவியுடன் கரைக்கு இழுத்து வரப்பட்டது. அதை மீனவர்கள் மற்றும் ஜேசிபி வாகன உதவியுடன் மணல் பரப்புக்கு கொண்டுவந்த கடலோரக் காவல்படையினர், மீனவர் ஏழுமலையிடம் ஒப்படைத்தனர்.

சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு மீட்கப்பட்டதால், தமது வாழ்வாதாரமும் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடலோரக் காவல்படையினருக்கு, மீனவர் ஏழுமலை நன்றி தெரிவித்தார்.