​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு, பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத கழிவறைகள்

Published : Jan 09, 2019 7:10 AM



ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு, பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத கழிவறைகள்

Jan 09, 2019 7:10 AM

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாக நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும், நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில், அங்கு போதிய பராமரிப்பின்மை காரணமாக சுகாதாரச் சீர்கேடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பயன்படுத்தும் கழிவறை, குளியலறை, கை கழுவும் இடம் போன்றவை கடந்த மாதக்கணக்கில் சுத்தப்படுத்தப்படாமல் மிகவும் அசுத்தமாகக் காட்சியளிக்கிறது.

கழிவறைகளில் தண்ணீர் சரிவர விநியோகிப்படாததால் துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

கழிவறைக்குச் செல்பவர்கள் வெளியில் இருந்து குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில், மருத்துவர்களும், பணியாளர்களும் பயன்படுத்தும் கழிவறைகளில் தண்ணீர் விரயமாக்கப்படுகிறது.

பெண்களுக்கான கழிவறையை ஆண்களும் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மருத்துவமனையின் ஏசி இயந்திரங்கள் உடைக்கப்பட்டும், உதிரி பாகங்கள் இல்லாமலும் திறந்த வெளியில் கிடக்கின்றன.

மருத்துவத் துறையில் முன்னணியில் திகழும் தமிழக சுகாதாரத்துறை, நூற்றாண்டுகளைக் கடந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.