​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கு

Published : Jan 08, 2019 6:25 PM

மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கு

Jan 08, 2019 6:25 PM

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கெடார் அருகே வீரமுர் ஏரியில் கடந்த 30ஆம் தேதி அதிகாலை 5 பேர் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த போது சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் படுகாயம் அடைந்தார். தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்தது. 

இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்கையில், புதுச்சேரி, விக்கிரவாண்டி, மரக்காணத்தைச் சேர்ந்த 11 பேர் பன்றியை வேட்டையாட துப்பாக்கியால் சுட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களில் 5 பேரைக் கைது செய்துள்ள போலீசார், நாட்டுத்துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்தனர். 6 பேரை தேடி வருகின்றனர்.