​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
CBSE 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை ஜனவரி 16 தொடங்கி பிப்ரவரி 15க்குள் முடிக்க உத்தரவு

Published : Jan 08, 2019 6:10 PM

CBSE 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை ஜனவரி 16 தொடங்கி பிப்ரவரி 15க்குள் முடிக்க உத்தரவு

Jan 08, 2019 6:10 PM

10 மற்றும் 12ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை ஜனவரி 16 முதல் பிப்ரவரி 15-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு, வரும் பிப்ரவரி மாத இறுதியில் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. அதற்கு முன்பாக செய்முறைத்தேர்வுகளை முடித்து, அதன் மதிப்பெண் விவரங்களை பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று CBSE தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

ஜனவரி 16 முதல், பிப்ரவரி 15 வரை எந்த நாட்கள் வசதியாக உள்ளதோ அதன் படி தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.