​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீராணம் ஏரியில் 21வது மதகில் உடைப்பு

Published : Jan 08, 2019 5:31 PM

வீராணம் ஏரியில் 21வது மதகில் உடைப்பு

Jan 08, 2019 5:31 PM

வீராணம் ஏரியில் ஏற்பட்ட உடைப்பு, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் சரிசெய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரியானது முழு கொள்ளளவை நெருங்கிய நிலையில், 21ஆவது மதகில் இன்று உடைப்பு ஏற்பட்டது. வாழக்கொல்லை கிராமம் அருகே உள்ள புது வாய்க்கால் என்ற இடத்தில் ஏற்பட்ட உடைப்பால், சென்னை - காட்டுமன்னார்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து அங்கு சென்ற பொதுப்பணித்துறையினர் மற்றும் சேத்தியாதோப்பு காவல் துறையினர் இணைந்து ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன், மணல் மூட்டைகள் மூலம் உடைப்பை சரிசெய்தனர். இருப்பினும் நீர் கசிந்து கொண்டே இருப்பதால் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.