​​ ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவிப்பு

Published : Jan 08, 2019 5:10 PM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவிப்பு

Jan 08, 2019 5:10 PM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசு அறிவித்துள்ளது.

4 போட்டிகள் கொண்ட தொடரில் இறுதிப் போட்டியை சமன் செய்ததுடன், இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதற்காக பாராட்டு தெரிவித்துள்ள பிசிசிஐ, இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி அணியில் விளையாடிய 11 வீரர்களுக்கு ஆட்டம் ஒன்றுக்கு 15 லட்சம் ரூபாயும், மற்ற வீரர்களுக்கு ஏழரை லட்ச ரூபாயும் ரொக்க பரிசாக வழங்கப்படுகிறது. அணியின் பயிற்சியாளர்களுக்கு ஆட்டம் ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஊழியர்களுக்கு மாத சம்பளத்திற்கு இணையான தொகை பரிசாக அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.