​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிசைப் பகுதிகளற்ற சென்னையை உருவாக்குவதே அரசின் நோக்கம் -ஓ.பன்னீர்செல்வம்

Published : Jan 08, 2019 4:53 PM

குடிசைப் பகுதிகளற்ற சென்னையை உருவாக்குவதே அரசின் நோக்கம் -ஓ.பன்னீர்செல்வம்

Jan 08, 2019 4:53 PM

குடிசைப் பகுதிகளற்ற சென்னை மாநகரத்தை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் எனத் தமிழகத் துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புக் கட்ட வேண்டுமெனச் சட்டப்பேரவையில் உறுப்பினர் ரவிச்சந்திரன் பேசினார்.

அதற்குப் பதிலளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பங்கஜம் தெரு, ஓசான்குளம் ஆகிய பகுதிகளில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளைத் தொழில்நுட்பக்குழு ஆய்வுசெய்தபின் பழுதுபார்ப்பதா, இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

உலக வங்கியின் நிதி உதவியுடன் குடிசைப் பகுதிகளை அகற்றிவிட்டுப் புதிய குடியிருப்புகள் கட்டத் திட்டமிட்டுள்ளதாகவும், குடிசைப் பகுதிகளற்ற சென்னை மாநகரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும் துணைமுதலமைச்சர் தெரிவித்தார்.