​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
22 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் விவகாரம், ரயில்வே ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை மீது அறப்போர் இயக்கத்தினர் குற்றச்சாட்டு

Published : Mar 29, 2018 2:42 AM

22 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் விவகாரம், ரயில்வே ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை மீது அறப்போர் இயக்கத்தினர் குற்றச்சாட்டு

Mar 29, 2018 2:42 AM

சட்ட விரோதமாக கடத்தப்படும் 22 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட போதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் ரயில்வே ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை காலம் தாழ்த்துவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சென்னை எழும்பூரில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லியிலிருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் திருக்குறள் விரைவு ரயிலில், குட்கா பொருட்கள் மதுரைக்கு கடத்தி வரப்படுவதாகவும், மதுரையில் கூடுதல் நேரம் ரயில் நிறுத்தப்பட்டு வி.ஐ.பி. வாயில் வழியே குட்கா பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். குட்கா கடத்தலில் ரயில்வேயின் முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.