​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொதுத் தேர்வின், தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு 32 கட்டுப்பாடுகள்

Published : Jan 08, 2019 10:40 AM

பொதுத் தேர்வின், தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு 32 கட்டுப்பாடுகள்

Jan 08, 2019 10:40 AM

பள்ளி தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு 32 கட்டுப்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் விதித்துள்ளது. தமிழகத்தில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்குகின்றன.

இதை முன்னிட்டு, தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேர்வறையில் செல்போன் வைத்திருக்கக்கூடாது, பணி ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிக்கு தேர்வு நடப்பதற்கு ஒன்னே கால் மணிநேரத்துக்கு முன்பாகவே சென்று விட வேண்டும், ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபடும் தேர்வர்களின் விபரத்தை முதன்மைக்கண்காணிப்பாளருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவற்றை முறையாக பின்பற்றாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.