​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குஜராத்தில் ஓடும் ரயிலில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை

Published : Jan 08, 2019 9:22 AM

குஜராத்தில் ஓடும் ரயிலில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. சுட்டுக் கொலை

Jan 08, 2019 9:22 AM

குஜராத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ரயிலில் பயணித்த போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜெயந்திலால் பனுசாலி என்ற பாஜக பிரமுகர் சயாஜி நகரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.

கத்தாரியா-சுர்பாரி ரயில்நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் ஏறிய மர்ம நபர்கள், ஜெயந்திலால் பயணித்த பெட்டிக்குள் நுழைந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரை சரமாரியாக சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.