​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இணையவழி வர்த்தகம் - உள்நாட்டு நிறுவனங்கள், சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு?

Published : Jan 08, 2019 8:47 AM



இணையவழி வர்த்தகம் - உள்நாட்டு நிறுவனங்கள், சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு?

Jan 08, 2019 8:47 AM

இணைய வழி வர்த்தகம் பெருகிவருவதால், நாட்டில் உள்ள சிறு வியாபாரிகள் கடுமையான பொருளாதார சவால்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது.

வால்மார்ட் நிறுவனத்தின் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களின் இணைய வர்த்தகத்தால், சந்தைகளில் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

பிட்சா முதல் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய கார்கள் வரை அனைத்தையும் இணையத்தில் பார்த்து ஆர்டர் செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கிட்டதட்ட 75 விழுக்காடு இணைய வர்த்தகத்தை இரு பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடக் கூடிய சூழல் உருவாகி வருகிறது.

அண்மையில் இணையவழி வர்த்தகம் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. இதனால், இந்தியாவில் இயங்கும் இணையவழி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இணையவழி வர்த்தம் என்பது மொத்த வர்த்தகத்தில் மூன்று சதவீதம் தான் என்றும், அதனால்தான் இணையத்தில் மிகப்பெரிய தள்ளுபடிகளைக் கொடுத்து நுகர்வோரைக் கவர வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் பன்னாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன.