​​ அரசு பள்ளி மாணவர்கள் சென்று வர இலவச ஆம்னி காரை வழங்கிய ஆசிரியர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பள்ளி மாணவர்கள் சென்று வர இலவச ஆம்னி காரை வழங்கிய ஆசிரியர்

Published : Jan 07, 2019 7:31 PM

அரசு பள்ளி மாணவர்கள் சென்று வர இலவச ஆம்னி காரை வழங்கிய ஆசிரியர்

Jan 07, 2019 7:31 PM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர உதவியாக இருக்க ஆசிரியர் ஒருவர் ஆம்னி காரை இலவசமாக வழங்கியுள்ளார்.

செஞ்சி அடுத்துள்ள பள்ளிக்குளத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள். இங்கிருந்து பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் நடந்து சென்று வருகின்றனர்.

இதையறிந்த அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பன்னீர், மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர உதவியாக இருக்க சொந்த செலவில் ஆம்னி காரை இலவசமாக வழங்கியுள்ளார். அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் ஆம்னி காருக்கு ஒரு வருடம் தேவைப்படும் பெட்ரோல் மற்றும் ஓட்டுநர் ஊதியத்தை வழங்குவதாக ஏற்றுக் கொண்டுள்ளார்.